'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் மூலம் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. அதியன் ஆதிரை இயக்கியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, முனிஸ்காந்த், ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைவந்து படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' - director Athiyan AAdhirai
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்தார்.
இயக்குநர் அதியன் ஆதிரை
இந்நிலையில், படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' பெரும் கொண்டாட்டத் தோடு படத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கியுள்ளோம். டப்பிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று விரைவில் திரைக்கு வர உள்ள இப்படம், தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்' என அவர் தெரிவித்தார்.