இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீஸரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசிகிறது. இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?
எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பிவைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்கவைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தர்.