இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் ஜெயக்குமாரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இவருடன் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் ரசிகர்களும் சமூக வலைதள வாசிகளும் படத்தின் போஸ்டரையும் டீசரையும் வைத்து கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில் இப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என சந்தோஷ் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது.
நவம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணங்கள் தேவையில்லை என க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்புக்கு புதியத் திரைப்படங்கள் வெளியிட சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஆனால் இந்த முடிவு தற்காலிகமானது என்றும் பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.