இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் மாற்றுத்திறனாளிகளுக்காக திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளோடு படத்தைப் பார்த்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்வதில் பின்தங்கியே உள்ளோம்: பா. இரஞ்சித்! - Irandaam Ulaga Porin Kadaisi Gundu Special Screening
சென்னை: பா. இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் சிறப்பு காட்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கு திரையிடப்பட்டது.
அதையடுத்து இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முழுமையானதாக இல்லை என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டேன். எனது அடுத்த திரைப்படங்களில் காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழில் நுட்பங்களை வைத்து வெளியிட முயற்சி செய்வேன் எனப் பேசினார்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு அழுத 'குண்டு' பட இயக்குநரின் மனைவி