தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்படி என்ன செய்தார் 'ராங்கி' திரிஷா - முருகதாஸ்

திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

File pic

By

Published : May 22, 2019, 7:04 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான திரிஷா பல வருடங்களாக தென்னிந்தியாவின் பிரபல கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான '96' திரைப்படம் பெரும் வெற்றியைக் கொடுத்தது. இதனையடுத்து எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கும் 'ராங்கி' என்னும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இதற்கான கதையை இயக்குநர் முருகதாஸ் எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாலைவனப் பகுதியில் எடுக்கப்பட உள்ளதாகவும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்தத் தகவலை உறுதி செய்யும் விதத்தில் படக்குழு தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் வெளிநாட்டு காவல் துறையினர் திரிஷாவை கைது செய்வது போன்று உள்ளது. ரசிகர்கள் இப்போஸ்டரை கண்டபிறகு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details