இயக்குநர் ஏ.எல்.விஜய் - நடிகர் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவான 'வாட்ச்மேன்' படம் நேற்று (ஏப்.12) வெளியானது. இதுகுறித்து படத்தின் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் ஈடிவி பாரத்-க்கு (Etv Bharat) சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் - சிறப்பு பேட்டி வாட்ச்மேன் படத்தில் நடித்துள்ளது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமா இருக்கு நேற்று வாட்ச் மேன் படம் ரிலீஸ் ஆகிருக்கு. படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் படத்தை பற்றி நல்ல கமெண்ட் வந்திருக்கு.
நாய்கூட நடிச்சிருக்கீங்க அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நாய்கூட நடிக்கிறது ஒரு குழந்தைகூட நடிக்கிற மாதிரி நான் உணர்ந்தேன். அது ஒரு நல்ல அனுபவமாகவும் இருந்தது. அதனுடைய அதிசயத்திற்கு ஏற்ப பார்த்து நடிக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் நாயுடன் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இந்த படத்தை நிறைய பள்ளிகளுக்கு திரையிடும்போது எப்படி வரவேற்பு இருந்தது?
மாணவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். குழந்தைகள் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருமே இந்தப் படத்தை விரும்புகின்றனர். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கான ஒரு படம் இது. கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க. ’வாட்ச்மேன்’ உங்களுக்கு ஒரு முழுமையான திருப்தி தரும் படமாக இருக்கும்.
தொடர்ந்து இதுபோன்று விலங்குகளோடு நடிப்பீர்களா?
ஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. மாறுபட்ட படங்களில் நடிக்க வேண்டும். இந்த படம் வெற்றியடைந்தால் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து சிந்திக்கப்படும். இந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகும் .
வாட்ச்மேன் படத்தில் நடித்த நீங்கள் புருனோ, விஜய், என்று நீங்கள் வரிசைப்படுத்தினால் யாருக்கு முதலிடம் தருவீர்கள்?
முதலில் இந்த படத்தில் நடித்த நாய் புருனோ, அடுத்ததாக இயக்குநர் விஜய், மூன்றாவதாகத்தான் நான். தெலுங்கில் பிளாக் ப்ஸ்டர் ஹிட் கொடுத்த 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் காதல் மற்றும் குடும்ப கதையை பின்னணியாக கொண்டுள்ளதால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.