தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 3:22 PM IST

Updated : Nov 14, 2019, 6:58 PM IST

ETV Bharat / sitara

'ஹீரோ' படத்திற்கு வந்த புதிய சிக்கல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay for actor Sivakarthikeyans hero movie

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருந்தது 'ஹீரோ' திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் 24 ஏ.எம். ஃபிலிம்ஸின் பங்குதாரர்களான ஆர்.டி. ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடமிருந்து 2018 செப்டம்பர் மாதம் 10 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.

பத்து மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறிய நிலையில் அவர்கள் இதுவரை பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து 24 ஏ.எம். ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'ஹீரோ' படத்தை, கே.ஜே.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

எனவே ஹீரோ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டியும் ஒப்பந்தத்தின்படி கடன் தொகையான 10 கோடி ரூபாயை 24 விழுக்காடு வட்டியுடன் திருப்பி வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஹீரோ' படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும் வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கைதி வசூல்: அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தி புதிய சாதனை!

Last Updated : Nov 14, 2019, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details