தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் 'கேடி' படம் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'கல்லூரி' படத்தில் கதையின் நாயகியாக பயணத்தைத் தொடங்கினார், தமன்னா.
சமீபத்தில் பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி 2' வெளியாகி ஆவரேஜாக ஓடியது. இந்நிலையில் அவர் தற்போது ’அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இதில், யோகி பாபு, முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், டாப்சி நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். அக்டோபர் 11ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. காமெடி கலந்த ஹரார் படமாக இது உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்!