பிகில் படம் பற்றிய சில முக்கியத் தகவல்களை படக்குழு தற்போது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி விருந்தாக அக்.25 ஆம் தேதி படம் வெளியாகிறது.
ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள இந்த நேரத்தில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட ஸ்டண்ட் காட்சிகளிலும் விஜய் டூப் இன்றி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது படத்தின் கால்பந்தாட்ட காட்சிகள் அனைத்தும் ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும் கோடை வெயிலில் படமாக்கப்பட்டபோது விஜய் உள்பட படக்குழுவினர் அதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த படத்தின் படத்தொகுப்பு ஒவ்வொரு நாளிலும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போதே செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஆரி அலெக்ஸா என்னும் கேமராவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிங்க: 'நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு ரசிகர்களுக்கு முன்னோடி' - காவல்துறை துணை ஆணையர்!