தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

RRR Movie - 15 நிமிடங்களுக்கு ஆலியா பட் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா? - ஆர்.ஆர்.ஆர் அப்டேட்

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிகை ஆலியா பட் வாங்கும் சம்பள விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியா பட்
ஆலியா பட்

By

Published : Dec 1, 2021, 11:46 AM IST

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. பழங்குடி இனமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகிய போராளிகளின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் - இந்தியா படமாக ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ஆலியா பட்

மூன்று மணி நேர பிரமாண்ட படத்தில் ஆலியா பட் மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறார் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியானது. இந்தநிலையில் இந்த 15 நிமிட காட்சிக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

படப்பிடிப்பில் வெறும் 10 நாள்கள் கலந்துக்கொள்ள ஆலியா ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகப் பேசப்படுகிறது. ஆலியாவின் கதாபாத்திரம் முக்கியமானதாகவும், திரைபடத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் இருப்பதால் இவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள். படத்தில் சில நிமிடங்கள் வரும் ஆலியாவிற்கே இவ்வளவு சம்பளம் என்றால், அஜய் தேவன், ஜூனியர் என்டிஆருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருப்பார்கள் என நெட்டிசன்கள் விடை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆர்ஆர்ஆர் மூன்றாவது சிங்கிள் 'உயிரே' பாடல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details