தமிழில் சர்வம், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்திரஜித் சுகுமாரன்.
நடிகர் பிரித்விராஜின் சகோதரரான இவர், தற்போது கௌதம் மேனன் இயக்கும் குயின் வெப்சீரிஸில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பிபின் பால் சாமுவேல் இயக்கும் 'ஆஹா' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். முழுவதும் விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும், இந்தப்படத்தில் இந்திரஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை சாந்தி பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அமித் சக்காலக்கல், அஸ்வின்குமார், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.