சென்னை: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், கோலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
சந்தானம் நடிப்பில் உருவாகும் 'டிக்கிலோனா' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஹர்பஜன் சிங். இதையடுத்து இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதையடுத்து 'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன் சிங் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து தனது பாணியில் ட்வீட் செய்துள்ள ஹர்பஜன், என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.
#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஜெண்டில் மேன்' படத்தில் செந்தில் உபயோகிக்கும் டிக்கிலோனா என்ற விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக டிக்கிலோனா என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சந்தானம் டிரிபிள் ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறாராம்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.