நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சமீபத்தில் அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள், திரையுலகினர் பலரும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். அந்தவகையில் வைரமுத்து கமல் ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் எனக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.