தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறப்பிலும் எம்ஜிஆருடன் என்ன ஒரு ஒற்றுமை! 'நாளை நமதே' இயக்குநர் காலமானார் - சேதுமாதவன் மறைவு

நாளை நமதே படம் இயக்கிய கே.எஸ். சேதுமாதவன் (90) வயதுமூப்பு காரணமாக இன்று (டிசம்பர் 24) காலமானார்.

'நாளை நமதே' இயக்குநர் காலமானார்
'நாளை நமதே' இயக்குநர் காலமானார்

By

Published : Dec 24, 2021, 9:54 AM IST

Updated : Dec 24, 2021, 10:42 AM IST

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர் கே.எஸ். சேதுமாதவன் (90). இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களையும் இயக்கியுள்ளார்.

குறிப்பாக நம்மவர், நாளை நமதே, மறுபக்கம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். 2009ஆம் ஆண்டில், மலையாளத் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்காக இவருக்கு கேரள அரசின் உயரிய விருதான ஜேசி டேனியல் விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன்

இந்நிலையில் சென்னையில் வசித்துவந்த கே.எஸ். சேதுமாதவன் வயதுமூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இவர் இயக்கிய நாளை நமதே படத்தின் நாயகன் எம்ஜிஆரும் 1987ஆம் ஆண்டு இந்த நாளிலேயேதான் (டிசம்பர் 24) மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நாளை நமதே' இயக்குநர் காலமானார்

இதையும் படிங்க:ராக்கி - கோலிவுட் கேங்ஸ்டர் சினிமாக்களின் புதியதோர் அலை

Last Updated : Dec 24, 2021, 10:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details