காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. இந்த அறிவிப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவங்களுக்கு இதே வேலையாபோச்சு: இந்திய சினிமாவுக்கு பாகிஸ்தான் தடை!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதன் விளைவாக பாகிஸ்தானில் இந்திய சினிமா இனி திரையிடப்படமாட்டாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
cinema
இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்படாது என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இந்திய விமானப்படை பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது நடத்திய தாக்குதலின் போதும், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.