தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#Hbd ஆண்ட்ரியா : காந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆண்ட்ரியா - காந்த குரலுக்கு சொந்தகாரி ஆண்ட்ரியா

நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

indian-actress-andrea-jeremiah-birthday
indian-actress-andrea-jeremiah-birthday

By

Published : Dec 21, 2021, 9:44 AM IST

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா. தமிழ் திரையுலகிற்கு 2005ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த ஆண்ட்ரியா 'கண்ட நாள் முதல்' படம் மூலம் அறிமுகமானார். 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மூலம் பிரபலமானவர், தனது நடிப்புத்திறானால் மட்டுமல்லாது பாடல்களாலும் ரசிகர்களை கவர்ந்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தனுஷுடன் இணைந்து பாடிய 'உன் மேல ஆசை தான்' பாடல் பலராலும் வரவேற்கப்பட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார். அதையடுத்து, மாஸ்டர், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார்.

Hbd ஆண்ட்ரியா

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் -ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இம்மாதம் 'புஷ்பா' திரைப்படம் வெளியானது. இப்படத்தில், இடம்பெற்ற 'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா' பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார்.

Hbd ஆண்ட்ரியா

இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் இணையத்தில் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், சர்ச்சையிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

காந்த குரலுக்கு சொந்தகாரி ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா இன்று(டிச.21) தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : சிம்புவுடன் ஜோடி சேரும் பிரமாண்ட இயக்குநர் மகள்

ABOUT THE AUTHOR

...view details