தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆந்திராவில் முகாமிட்டுள்ள 'இந்தியன் 2' படக்குழு

'இந்தியன் 2' முக்கிய காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். 20 நாட்கள் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் கமல் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் முகாமிட்டுள்ள 'இந்தியன் 2' படக்குழு

By

Published : Sep 18, 2019, 2:44 PM IST

கடந்த மாதம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தொடங்கியுள்ளது. இங்கு 20 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். இதையடுத்து கமல்ஹாசன் விரைவில் படக்குழுவுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' உருவாகிவருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில், நடிகை காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, நெடுமுடிவேனு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு இசை - அனிருத்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details