இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கத் திட்டமிட்டார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது.
கமல், ஷங்கரின் முடிவால் கவலையில் லைகா! - Director sankar
கமல் ஹாசன், ஷங்கர் ஆகியோர் தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருவதால் ’இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனமான லைகா கவலையில் உள்ளது.
இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கமல் ஹாசன் தேர்தல் பணியில் பிஸியானது போன்ற காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நின்றது.
இதற்கிடையில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க ஷங்கர் முடிவு செய்தார். தெலுங்கு நடிகர் ராம் சரணை சந்தித்து சம்மதமும் வாங்கினார் ஷங்கர். இந்நிலையில் ஷங்கர், தங்களது படத்தை முடித்துதராமல் வேறு படங்களை இயக்க கூடாது என அவர் மீது லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் ஷங்கர், ராம் சரண் படத்தை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இவ்வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கடத்த சில நாள்களாக ஷங்கர் ராம்சரணுடன் பட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கமலோ தேர்தல் பணிகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் பணிகளை தொடங்கி விட்டார்.
ஆனால் இதுவரையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து இன்னும் 20 விழுக்காடு மட்டுமே எடுக்க வேண்டிய இந்தியன் 2 படத்தின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது.
லைகா நிறுவனம் தேவையில்லாமல் நீதிமன்றத்தை நாடியதால் தான் கமலும், ஷங்கரும் இந்தியன் 2 படத்தை மனதளவில் ட்ராப் செய்துவிட்டதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.