தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் பெயர் 'இல்லை' - நடிகர் சித்தார்த் பளிச்! - corona news in tamilnadu

இந்தியாவில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியவர்களில், பெரும்பாலானோர் இரண்டாவது டோஸுக்காக காத்திருக்கின்றனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், “இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் பெயர் 'இல்லை' என்று தான் இருக்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.

India top vaccine is NO VACCINE says Actor Siddharth in his tweets, நடிகர் சித்தார்த் ட்வீட், தடுப்பூசி குறித்து நடிகர் சித்தார்த், Actor Siddharth tweet in tamil, முக்கிய செய்திகள், தடுப்பூசி செய்திகள், இந்தியா கொரோனா தடுப்பூசி, top news in tamilnadu, breaking news in tamilnadu, hot news in tamilnadu, corona news in tamilnadu, corona vaccine status in india
நடிகர் சித்தார்த் ட்வீட்

By

Published : May 29, 2021, 2:40 PM IST

சென்னை: கரோனா தடுப்பூசியின் தட்டுப்பாடு குறித்து, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால், நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர் ஆகிறீர்கள். அப்படி உங்களுக்கான தடுப்பூசி கிடைக்கவில்லை என்றாலோ, இல்லை என்று கூறப்பட்டாலோ, கோபம் கொள்ளுங்கள்.

அரசியல் ஆதரவாளர்களுக்கு தடுப்பூசிகள் உடனடியாக கிடைத்து விடுகின்றன. ஆனால் உங்களைப் போன்ற சாமானிய மக்களிடம் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

நீங்கள் ஒவ்வொருவரும் விலையில்லா தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். அது சரியான நேரத்தில் கிடைக்கவில்லை எனில், உயிர் பயத்துடன் கோபம் கொள்ளுங்கள் . இது உங்கள் உரிமை. நீங்கள் நீங்களாகவே இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details