கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த 'பிகில்' திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டான நிலையில், கால்பந்து வீராங்கனைகளாகத் தோன்றிய பெண்களின் நடிப்பு வெகுவானப் பாராட்டைப் பெற்றது.
இந்த வருட பிறந்தநாள் என்வாழ்வில் மறக்க முடியாத ஒன்று - 'பிகில்' வேம்பு! - பிகில் படப்பிடிப்பு தளம்
நடிகை இந்துஜா பிகில் படப்பிடிப்பின் போது கொண்டாடடிய பிறந்த நாள் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய தந்தை விஜய்யின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள 'பிகில்' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா தவிர பிற நாடுகளிலும் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிவருகிறது. இதனிடையே அரபு நாடுகளிலும் பிகிலை திரையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜா பிகில் படப்பிடிப்பின் போது தனது பிறந்த நாளை கொண்டாடாடி உள்ளார். அப்போது விஜய், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். அப்போது இந்துஜா அவர்களுக்கு கேக் ஊட்டிய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்தும் வைரலாக்கி வருகின்றனர்.