பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி சுமார் 70 நாள்களை நெருங்கப் போகிறது. இந்த முறை அனைவருமே ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பதால் யார் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தைத் தட்டிச் செல்வார் என தெரியவில்லை.
இதனிடையே நேற்றைய எபிசோட்டில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டதாக கமல் ஹாசன் அறிவித்தார். யாருமே எதிர்பார்க்காத இவரின் வெளியேற்றம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.