தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் சங்கத் தேர்தல் : இமயம் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு! - தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வரும் பிப்.27 அன்று நடைபெற இருக்கும் நிலையில், அதில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான இமயம் அணி, தங்களின் வாக்குறுதிகளை சங்க உறுப்பினர்களிடம் அறிவித்துள்ளது.

இயக்குனர் சங்கத் தேர்தல் - இமயம் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
இயக்குனர் சங்கத் தேர்தல் - இமயம் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

By

Published : Feb 21, 2022, 7:46 AM IST

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வரும் பிப்.27 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கே. பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குநர் பாக்யராஜ் நேற்று (பிப். 20) வெளியிட்டார்.

பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள்

பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள இயக்குநர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. ஆனால், நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணைதான் வைத்துள்ளேன். நான் வெற்றிபெற்றால் இயக்குநர்கள் எந்த பிரச்சினை என்றாலும் என்னை அழைக்கலாம்.

இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிட அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே, அனைவரும் போட்டியிடும் சூழலை ஏற்படுத்த நியாயமான தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்கம் சார்பில் செய்யப்படும் உதவித் தொகை விவரங்கள் அந்தந்த மாத இறுதியில் ரசீதுடன் வழங்கப்படும். சங்கத்திற்கு என்று யூ-ட்யூப் சேனல் தொடங்கப்படும். குடியிருக்க வீட்டு மனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

திரைப்படத்தின் சென்சார் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும். புதுமுக இயக்குநர் கதைகளை தயாரிக்கும் உதவியை சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

ABOUT THE AUTHOR

...view details