தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் தீவிர ரசிகை நான்...அஜித் விடியோவுக்கு பிறகு அலிஷாவின் அடுத்த அப்டேட் - பிகில் பட இசை வெளியீடு

அஜித் தன்னை வாழ்த்திய விடியோவை பதிவிட்டு வைரலான மூன்று நாட்களில், விஜய்யின் தீவிர ரசிகை நான் எனக் குறிப்பிட்டு ட்வீட்டியுள்ளார் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா.

அலிஷா அப்துல்லா

By

Published : Sep 23, 2019, 7:10 PM IST

சென்னை: விஜய்யின் பிகில் படத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா கடந்த வாரம் தல அஜித் தன்னை வாழ்த்திய விடியோவை வெளியிட்டார். இதைக் கண்ட அஜித் ரசிகர்கள் அந்த விடியோவை வைரலாக்கினர்.

இதனிடையே, அந்த விடியோவில் அலிஷாவின் சூப்பர் ரேஸ் பைக்கை ஓட்டிய பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் தல அஜித்.

மேலும் படிக்க: தல அஜித்திடம் பெற்ற வாழ்த்து...நினைவுபடுத்திய பெண் பைக் ரேஸர்

இந்த நிலையில், விஜய்யின் பிகில் பட இசை வெளியீடு கடந்த 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் அரசியல் நெடியுடன் பேசியதுடன், தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வு தனியார் டிவியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பாகியது. இதைத்தொடர்ந்து பைக் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா, பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஜய்யின் புகைப்படத்தை தனது ட்வீட்டரில் பதிவிட்டு, இந்த அடக்கமான மனிதரின் தீவிரமான ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன். பிகில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் குறித்து விடியோ வெளியிட்டு அடுத்த மூன்று நாட்களில், விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ள அலிஷா, தல-தளபதி என இரண்டு ரசிகர்களின் அபிமானங்களைப் பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details