சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கேக் வெட்டி மாணவிகளோடு தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
'பொள்ளாச்சி விவகாரத்தில் மக்கள் பக்கம் நான்' - இளையராஜா - இளையராஜா 75 வது பிறந்தநாள்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலை எப்படியோ அப்படித்தான் என்னுடைய மன நிலையும் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
1
பின்னர் செய்தியாளர்களிடம் இளையராஜா பேசுகையில், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என்னவோ, அதுதான் என்னுடைய மனநிலையும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது.
மக்கள் எப்படி சட்டம் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அப்படித்தான் நானும் விரும்புகிறேன். இளைஞர்கள் எல்லாம் நல்ல வழியில் நடக்க வேண்டும், என்றார்.