தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்கிய இளையராஜா - ilayaraja new studio

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது புதிய ஸ்டூடியோவில் இசையமைப்புப் பணிகளைத் தொடங்கினார்.

ilayaraja new studio
புதிய ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்கிய இளையராஜா

By

Published : Feb 3, 2021, 6:33 PM IST

சென்னை:இளையராஜா 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டூடியோவில்தான் தனது இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த சிலநாள்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா கோடம்பாக்கம் எம்எம் தியேட்டரில் புதிய ஸ்டூடியோவை கட்டினார். இன்று அந்த ஸ்டூடியோவில் வெற்றிமாறன் படத்தின் பாடலுக்கான இசையமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெமினி, விஜயா ஸ்டூடியோக்கள் போல் பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகவேண்டும் என்பதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தான் வந்துவிட்டதாகவும் தன்னுடைய சொந்த செலவில் புதிய ஸ்டூடியோவையும் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா

பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வந்தது தங்களுக்கு வருத்தமளிக்கிறதா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முன்னேறுபவர்களை தடுக்க இடையூறுகள் பல வரும், அதையெல்லாம் கடந்து செல்லவேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:“உழைப்பும் நேர்மையும் தான் ட்ரெண்ட் ஆகியிருக்கு” - ஆரி அர்ஜுனன்

ABOUT THE AUTHOR

...view details