தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளையராஜா இசையில் உலகம்மை! - குச்சி ஐஸ்

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் உலகம்மை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

இளையராஜா இசையில் உலகம்மை!
இளையராஜா இசையில் உலகம்மை!

By

Published : Aug 2, 2021, 12:08 PM IST

சென்னை : காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

மித்ரன், கௌரி

“உலகம்மை" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையில் உலகம்மை!

இளையராஜா இசை

1970ல் நெல்லையில் நடைபெற்ற சாதிய பிரச்னையை மய்யமாக கொண்டு உலகம்மை திரைப்படம் உருவாக்கப்படுகிறது. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க :'அண்ணாத்த'! - டப்பிங் பணியில் மீனா

ABOUT THE AUTHOR

...view details