'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' போன்ற திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது இயக்கியுள்ள படம், 'கடைசி விவசாயி'.
விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார்.
பின்னர் அவருக்கும், படக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது இசையை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக படக்குழு சேர்த்துள்ளது.
இந்த விவகாரம் இளையராஜாவுக்குத் தெரியவரவே, தன்னுடைய அனுமதியின்றி படத்திலுள்ள இசையை நீக்கிவிட்டதாக இசையமைப்பாளர் சங்கத்தில் அவர்புகார் அளித்துள்ளார். கடைசி விவசாயி' திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தள்ளிப்போன ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர் வெளியீடு- ஏமாற்றத்தில் ரசிகர்கள்