சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது இசைக்கருவிகளை இளையராஜா எடுத்துச் செல்லலாம் என இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ இடையேயான இட உரிமை கோரும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாகத் தீர்ப்பளித்தது.
இன்னும் பிரசாத் ஸ்டுடியோ செல்லாத இளையராஜா...காரணம் என்ன? - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை : உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது இசைக்கருவிகளை இளையராஜா எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் ஸ்டுடியோவிற்கு வருகை தரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தனது இசைக்கருவிகளை எடுத்துச்செல்ல இளையராஜா இன்று (டிச.28) பிரசாத் ஸ்டுடியோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை.
இந்நிலையில் இசைக்கருவிகளை எடுக்க இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து இளையராஜா வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை வரை நேரம் இருப்பதால் இளையராஜா எப்போது வேண்டுமானாலும் வந்து தனது இசைக்கருவிகளை எடுத்துச் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.