தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஈரான் பட ரீமேக்கில் இளையராஜா - Iran movies

மஜித் மஜிதி இயக்கத்தில் உருவான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ எனும் ஈரான் திரைப்படத்தின் ரீமேக்கில் இளையராஜா பணிபுரியவுள்ளார்.

Ilayaraja compose music for children of heaven remake
Ilayaraja compose music for children of heaven remake

By

Published : Feb 25, 2020, 12:37 PM IST

1997ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் சாமி பெற்றுள்ளார். இதுகுறித்து சாமி கூறுகையில், “நான் இயக்கிய 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' ஆகிய மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல்தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். இந்தப் படம் உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடமும் எப்படி கலந்துள்ளது என்பதை அவர்களின் மூலம் அறிந்தேன்.

இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதிலாக, இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றேன். இந்தப் படம் 80களில் நடக்கும் கதை என்பதால், அதன் அடிப்படையை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி, இறுதியாகக் கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்ற ஊரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம்தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.

அக்கா குருவி

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு நடத்தி, இறுதியாக மாஹின் என்ற சிறுவனையும், டாவியா என்ற சிறுமியையும் தேர்வு செய்தோம். பிரதான கதாபாத்திரமாக ஜோடி 'ஷூ' ஒன்று இடம்பெறுகிறது. இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

சாமி - இளையராஜா

தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு 'அக்கா குருவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை இயக்கிய இயக்குநர் மஜித் மஜிதியை அழைக்கவிருக்கிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details