1976ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, தமிழ் இசை உலகின் அசைக்க முடியாத மன்னனாக வலம் வருகிறார், இளையராஜா.
80’ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரது இசைக்கு பலதரப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு. காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை இயன்றவரையில் கொடுத்துக் கொண்டே வருகிறார்.
இந்நிலையில் இளையராஜா இசையமைக்கும் 1422ஆவது படம் குறித்த தகவல் காதலர் தினத்தன்று 14.02.2022ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இரண்டு எண்களும் ஒரே மாதிரி இருப்பது சுவாரசியத்தை தருவதாக அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.