ஆங்கில புத்தாண்டு ஒவ்வொருமுறையும் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள, 'இளமை இதோ' பாடலுடன்தான் தொடங்குகிறது. எஸ்பிபி குரலில் இளையராஜா இசையில் வெளியான இந்தப் பாடல் இன்றும் ரசிகர்களிடம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறும் நிலையில் 'இளமை இதோ' பாடலை காரில் பாடியபடி வாழ்த்து கூறியுள்ளார்.