இசைஞானி இளையராஜாவின் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் ஸ்பாட்டிஃபை (spotify app) மியூசிக் செயலியில் தொகுத்து வழங்கப்பட்டுவருகிறது. ஸ்பாட்டிஃபை செயலி இது தொடர்பாக இசைஞானி இளையராஜாவிடம் சமீபத்தில் உரையாடும் விளம்பர காணொலி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஸ்பாட்டிஃபை செயலி (spotify app) உருவாக்கிய விளம்பர காணொலி தற்போது நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் சதுக்கத்தில் (new york Billboards of Time Square) ஒளிபரப்பானது. முதல்முறையாக இளையராஜாவின் பேனர் டைம் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.