தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

" IFFK " விழாவில் விருதுகள் அள்ளிய ஜல்லிக்கட்டு, ஆனி மானி, கும்பளங்கி நைட்ஸ்! - ஆனி மானி

கேரளா: இந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் வருடந்தோறும் ஆவலோடு பங்கேற்கும் IFFK எனப்படும் கேரள உலகத் திரைப்பட விழா, 2019ஆம் ஆண்டிற்கான 24ஆவது திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல்வேறு மலையாளத் திரைப்படங்களும், பிரேசில், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களூம் பல பிரிவுகளில் விருதுகளைக் குவித்துள்ளன.

IFFK 2019
Lijo jose Pellissery at IFFK 2019

By

Published : Dec 14, 2019, 11:48 AM IST

Updated : Dec 14, 2019, 11:56 AM IST

டிசம்பர் ஆறாம் தொடங்கி 13ஆம் தேதியோடு நிறைவடைந்த இந்த விழாவில், ’தே ஸே நத்திங் ஸ்டேஸ் த ஸேம்’ (They Say Nothing Stays the Same) எனும் ஜப்பானியத் திரைப்படம் ’த கோல்டன் க்ரோ பீஸண்ட்’ விருதினை வென்றுள்ளது. இந்தப்படத்தை ஜோயி ஒடாகிரி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார்.

சிறந்த இயக்குநருக்கான விருதினை பிரேசிலைச் சேர்ந்த இயக்குநர் ஆலன் டெபெர்டன், பகாரெட் (Pacarrete) திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார். அவர் மதர் (Our Mother) திரைப்படத்திற்காக சீசர் டயஸ் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

ஈ மா யூ, அங்கமாலி டைரீஸ் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்தியாவின் முக்கிய கல்ட் இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி, தனது சமீபத்தியத் திரைப்படமான ’ஜல்லிக்கட்டு’ திரைப்படத்திற்காக தேர்வுக்குழுவினரின் சிறப்புப் பிரிவு விருதினையும், பார்வையாளர்களால் வழங்கப்படும் பரிசுத்தொகையையும் பெற்றார்.

இதையும் படிங்க: ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் வெற்றி சந்திப்பு!

FIPRESCI எனப்படும் உலகத் திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் சிறந்த திரைப்பட விருதினை போரிஸ் லோஜ்கின் இயக்கிய ’கேமில்லே’ (Camille) திரைப்படம் வென்றது. மேலும் FIPRESCI - சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான விருதினை சந்தோஷ் மண்டூர் இயக்கிய ஃபீவர் திரைப்படம் வென்றது.

IFFK 2019

NETPAC (நெட்வொர்க் ஃபார் த ப்ரோமோஷன் ஆஃப் ஆசியன் சினிமா) ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை ஃபஹிம் இர்ஷாத் இயக்கிய ’ஆனி மானி’ திரைப்படம் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த சிறந்த அறிமுக இயக்குநருக்கான கே ஆர் மோஹனன் விருதினையும் ’ஆனி மானி’ பெற்றுள்ளது

NETPAC சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான விருதினை பிர்ஜூ இயக்கிய வெயில்மரங்கள் திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி, மலையாள சினிமா ரசிகர்களைத் தாண்டி, அனைத்து மொழி ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பைப் பெற்று, வணிகரீதியாகவும் பெரும் வெற்றியடைந்த மது சி நாராயணன் இயக்கிய ’கும்பளங்கி நைட்ஸ்’, NETPAC சிறந்த மலையாளத் திரைப்படங்களுக்கான சிறப்புப் பிரிவில் விருது வென்றுள்ளது குறிப்படத்தக்கது.

இதையும் படிங்க:'வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைகளை தயாரிப்பேன்'- பா. ரஞ்சித்

Last Updated : Dec 14, 2019, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details