தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#IFFI 2019: கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் தமிழ் சினிமாக்கள்! - ஒத்த செருப்பு

கோவாவில் இவ்வருடம் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தேதியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

iffa

By

Published : Oct 6, 2019, 1:50 PM IST

கோவாவில் நடைபெற உள்ள 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனனின் 'ஹவுஸ் ஓனர்' ஆகிய திரைப்படங்களைத் திரையிட உள்ளனர். அதேபோல், மலையாளத்தில், 'உயரே', 'ஜல்லிக்கட்டு', 'கோலாம்பி', உள்ளிட்ட திரைப்படங்களும் இந்தியில் 'உரி', 'கல்லிபாய்', 'சூப்பர் 30' உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.

அதேபோல், சமீபத்தில் 'தாதா சகிப் பால்கே விருது' அறிவிக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்த விழாவில் அந்த விருது வழங்கி கவுரவிக்க உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details