கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘எம் எஸ் தோனி’ படத்தில் தோனியாக நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் பாலிவுட்டில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
இதனையடுத்து தற்போது சுஷாந்தின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது. இந்நிலையில், மறைந்த நடிகரின் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்ததா? என்பதை அறிய வழக்குரைஞர் ஒருவரை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நியமித்துள்ளார்.
இது குறித்து டுவீட் செய்துள்ள சுப்பிரமணிய சுவாமி, “சுஷாந்த் வழக்கின் உண்மை நிலையை ஆராய்ந்து, இது சிபிஐ விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து தெரிவிக்க வழக்கறிஞர் இஷ்காரனிடன் கேட்டுள்ளேன். பின்னர் நீதி வழங்கப்படுவதை பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!