உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் சினிமா நட்சத்திரங்களும் கரோனா பிடியில் இருந்து தப்பவில்லை. அந்தவகையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று காலை தான் டெஸ்ட் ரிசல்ட் வந்தது. எனக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எனக்கு தற்போது வரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. சமீபத்தில் நான் கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை சந்தித்தேன். அவரது டெஸ்ட் பாசிட்டிவ் என வந்தது. சென்ற வெள்ளிக்கிழமை தான் எனக்கு அது தெரிந்தது.