லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "இடம் பொருள் ஏவல்". சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று படத்தின் தயாரிப்பாளரும் லிங்குசாமியின் சகோதரருமான சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலையில் வெளியாகும் 'இடம் பொருள் ஏவல்'? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர் - இடம் பொருள் ஏவல் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விளக்கம்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று வலம் வரும் செய்திக்கு தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருகிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 'இடம் பொருள் ஏவல்' ரீலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி எங்கள் திரைப்படத்திற்கான ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்' என்றார்.
இதையும் படிங்க... 'நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாதிப் படங்கள் சித்தரிப்பதில்லை'
TAGGED:
idam porul yaeval issue