தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் யாருக்கும் போட்டி அல்ல - விவேக் - vivek new films

நடிகர் விவேக் தான் யாருக்கும் போட்டி அல்ல என்றும், யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவேக்
விவேக்

By

Published : Nov 7, 2020, 4:11 PM IST

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம்வருபவர் நடிகர் விவேக். அஜித், விஜய், ரஜினி, கமல்ஹாசன் என்று அனைத்து ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இவர் சமீபத்தில் கறுப்பு உடையணிந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

பலரும் அவர், நடிகர்களுக்குப் போட்டியாக களமிறங்கப் போகிறார் என்று பேசினர். இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

எனது சமீபத்திய போட்டோ ஷுட் படங்களைப் பார்த்துவிட்டு, “ஹீரோக்களுக்கு (பெயர் குறிப்பிட்டு) போட்டியாக விவேக்” என்று செய்திவருகிறது. நான் யாருக்கும் போட்டி அல்ல. யாரையும், யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’விஷாலுக்கு மதிக்கவே தெரியாது’ - கொந்தளிக்கும் ’பவர் ஸ்டார்’

ABOUT THE AUTHOR

...view details