தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கட்டிக்கிட்டா அவளத்தான் கட்டுவேன் - ஹீரோயின் மீது கண் வைத்த தெலுங்கு ஹீரோ - சாய் பல்லவியை திருமணம் செய்யும் விரும்பும் வருண் தேஜ்

கல்யாணம் கட்டிகிட்டா அவளத்தான் கட்டுவேன் என மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் நடிகையின் மீது தனக்கு இருக்கும் ஆசையை குறிப்பிட்டுள்ளார் தெலுங்கு நடிகர் வருண் தேஜ்.

நடிகர் வருண் தேஜ்

By

Published : Sep 23, 2019, 11:52 PM IST

Updated : Sep 24, 2019, 7:50 AM IST

ஹைதராபாத்: டேட்டிங் செல்வதற்கு, கல்யாணம் செய்வதற்கு, கொலை செய்வதற்கு என மூன்று ஹீரோயின்களை தேர்ந்தெடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் வருண் தேஜ்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாகத் திகழ்கிறார் வருண் தேஜ். இவர் வில்லனாக நடித்துள்ள கட்லகொண்டா கணேஷ் கடந்த வாரம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்காகும். முதலில் வால்மீகி என பெயர் வைக்கப்பட்ட நிலையில், சர்ச்சை எழுந்ததால் கட்லகொண்டா கணேஷ் என பெயர் மாற்றப்பட்டது.

தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு பிரபல இணையத்தளமான வூட்-இல் (www.voot.com) ஃபிட் அப் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருண் தேஜ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகைகள் சாய்பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, இவர்களின் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விருப்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வருண், கல்யாணம் கட்டுனா அது சாய் பல்லவிதான் என்று பளிச்சென கூறினார். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ஃபிதா படத்தில் வருண் தேஜ் - சாய் பல்லவி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர்.

தொடர்ந்து பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்லவும், ராஷி கண்ணாவை கொலை செய்யவும் விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த மூன்று நடிகைகளுடன் இணைந்து வருண் தேஜ் நடித்துள்ளார்.

இதனிடையே ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலமானர்களை பங்கேற்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Last Updated : Sep 24, 2019, 7:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details