குப்பத்து ராஜா படம் குறித்து..?
இந்த படத்தில் கதாநாயகிக்கு ப்ரண்டாக, குப்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணாக, பட்டறையில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் அழுக்கு உடை அணிந்து, லோக்கல் வசனங்கள் பேசி, தர லோக்கல் நடனமாடி கலகலப்பான கேரக்டரை செய்திருக்கிறேன்.
தொடர்ந்து வடசென்னை கேரக்டரில் நடிக்க என்ன காரணம்..?
முன்பெல்லாம் 10 படங்கள் வாய்ப்பு வரும். அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நடிப்போம். இப்ப வருவதே நாலைந்து படங்கள்தான். அதுவும் இந்த பொண்ணு லோக்கலாதான் நடிக்கும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ என்னவோ தெரியல.. அதனால தொடர்ந்து எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரங்கள்தான் வருகிறது. நானும் டீசன்டான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஐயராத்து பாஷை எல்லாம் நான் மிகவும் நன்றாக பேசுவேன். ஆனால் நம்பி வாய்ப்பு தர மாட்றாங்க. ஆரம்பத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தோமோ அதே கண்ணோட்டத்தில் தான் அனைவரும் பார்க்கிறார்கள். இதிலிருந்து தனித்துவமாக நம்மை உருவாக்கிக் கொள்வது ஒரு தனித்திறமைதான். அதற்கான வாய்ப்புகள் வரும்போது கண்டிப்பாக நடிப்பேன்.