பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 11ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பிறகு தலைமறைவாக இருந்த மீராவை, கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, இன்று (ஆக.15) சென்னை அழைத்துவந்தனர்.