கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்புகள் 50 விழுக்காட்டினருடன் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் படப்பிடிப்புகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை.
இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தற்போது ட்விட்டர் ஸ்பேசில் அவ்வப்போது ரசிகர்களுடன் பேசிவருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் மிஷ்கினும் நேற்று (ஜூன் 22) ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது அவரிடம் விஜய்யை வைத்து படம் இயக்கினால், அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரத்தை வடிவமைப்பீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மிஷ்கின், 'விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொடுப்பேன்' எனப் பதில் அளித்தார்.
மேலும் ’பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், இப்படத்தில் அவரது நடிப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கிய கனடா விஜய் ரசிகர்கள்