‘தேவி 2’ படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகை நந்திதா, “தேவி 2 படம் ரிலீஸ் ஆகியிருக்கு, தியேட்டர் விசிட் போவதற்கு நெர்வஸ்சா இருக்கு. இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். பேச்சு, நடை, உடை என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இந்த படத்துக்காக தனிப்பட்ட முறையில் எந்த ஒரு ஹோம் வொர்க்கும் நான் செய்யவில்லை. எல்லோரும் எப்படி ஃபிட்னஸ் மெயின்டயின் பண்றாங்களோ அதேபோன்று தான் நானும் செய்கிறேன். இயக்குநர் சொல்லிக் கொடுத்தது போன்று நடித்தேன்.
பிரபுதேவாவுடன் நடனமாட பயமாக இருந்தது: நந்திதா - தேவி 2
‘தேவி 2’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு நடிகை நந்திதா பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
பிரபுதேவா மிகவும் ஜாலியான நடிகர், அவரை ஒரு நடன இயக்குநராக பார்க்கும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், அவர் எனக்கு உதவினார், நடனங்கள் அனைத்தும் ரிகர்சல் செய்து ஆடினேன். அதனால்தான் அது நன்றாக அமைந்திருக்கிறது. அதை நான் எனது சோஷியல் மீடியாவில் கூட பதிவிட்டிருந்தேன். எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐடியா இல்லை. எந்த படங்கள் வருகிறதோ அந்த படத்தில் நான் நடிப்பேன். அதேபோன்று இந்த கதாநாயகனுடன்தான் நடிக்க வேண்டும் என்றும் எனக்கும் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.