நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜூனியர் என்டிஆரின் சிக்ஸ் பேக் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவு ஒன்றை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அந்தப் பதிவில் 'ஹே @tarak9999 (ஜூனியர் என்டிஆர்) நான் தன்பாலின ஈர்ப்பாளன் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் உங்களை இந்தப் படத்தில் பார்த்த பிறகு அப்படி ஒருவராக மாற நினைக்கிறேன். என்னா உடம்புடா நைனா' என்று பதிவிட்டுள்ளார்.