மும்பை: எனது படங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தர போராடுகிறேன் என்று தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா, ஒரு நடிகனாக ரசிகனுக்கு சிறந்த பொழுபோக்கை தர போராடுகிறேன். வெறும் படமாக நடிப்பது மட்டுமில்லாமல் அதன் மூலம் நல்ல தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்கிறேன்.
தெலுங்கில் சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படம் நான் இதுவரை நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது. முதலில் இந்தக் கதையின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் படத்தில் எனது கதாபாத்திரம் பாதுகாப்பான இடத்தில் இருந்த என்னை வெளியேற்றி புதிதாக சிந்திக்க வைத்தது. முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இந்தப் படத்தை குடும்பத்துடன் ரசித்தனர்.