ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில், அவருக்குப் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையும் உடற்பயிற்சி அறிவுரைகளையும் பகிர்ந்துவருகிறார்.
காபியைவிட ஸ்ட்ராங் எனது இடுப்பு - சம்யுக்தா ஹெக்டேவின் ஆச்சர்ய புகைப்படம் - சம்யுக்தா ஹெக்டேவின் உடற்பயிற்சி புகைப்படம்
சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதற்கிடையே மாடலிங் போட்டோ ஷூட், ஆண் நண்பருடன் பீச் பிகினி ஷூட் என ரசிகர்களைக் கிறங்கடித்தும் வருவார். தற்போது வித்தியாசமான உடற்பயிற்சி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அதில், சம்யுக்தா உடலை வில்லாக வளைத்து நிற்க அவரின் மேல் ஆண் ஒருவர் அவரின் இடுப்பைப் பிடித்து தலைகீழாக அந்தரத்தில் நிற்பது போன்று உள்ளது. அதற்குப் கேப்சனாக, 'உங்க காபியைவிட ஸ்ட்ராங் எனது இடுப்பு என்று நம்புகிறேன். எனது இடுப்பு பொய் சொல்லாது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.