பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 2018ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறைந்த இர்ஃபான் கான் குறித்து நடிகை ராதிகா மதன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "நான் அவரை சார் என்று அழைப்பதற்குப் பதிலாக 'அப்பா' என அழைத்தேன். அதற்கு அவர் சிரிப்பார். நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோதே 'அப்பா' என்றுதான் அழைத்தேன். அதை அவர் வித்தியாசமாக உணராமல், என்னைக் கட்டி அணைத்தார்.