தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சினிமாவில் ஏன் நடித்தேன்? - விஜய் சேதுபதி விளக்கம் - Vijay Sethupathi

திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின்போது, தான் சினிமாவில் நடித்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

By

Published : Oct 3, 2021, 12:36 PM IST

சென்னை:திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.பி. உதயகுமார், தயாரிப்பாளர் தாணு, பெப்சி சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, மேலும் பெப்சி சங்கத்தின் நிர்வாகிகள், எழுத்தாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் இதுதான்?

இந்த நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நிதி உதவியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை பெப்சி சங்கம் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட அனைத்துச் சங்கம் நிர்வாகிகளிடம் வழங்கினார் விஜய் சேதுபதி.

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய அவர், "தொழிலாளர் நலனைப் பற்றி யோசிக்கிறார் செல்வமணி. பெப்சிக்கு சரியான தலைவர் கிடைத்துள்ளார். இரு விளம்பரப் படங்களில் நடித்தேன், உடனே கொடுப்பேன் என்றதைத் தள்ளிவைக்க வேண்டாம் என எண்ணினேன்.

800 கோடி ரூபாயில் இது ஒரு சிறு புள்ளிதான். இத்தோடு நான் நிறுத்திவிடப் போவதில்லை, என்னால் முடிந்ததைச் செய்வேன். நான் சினிமாவிற்கு வந்தற்கு காரணம் என் அப்பாவிற்கு கடன் இருந்தது, துபாயில் போய் சம்பாதித்தேன். 20ஆம் தேதி ஆனால் வாடகையை நினைத்து பயமாக இருக்கும்.

வாடகை வீட்டில் இருப்பது பாகிஸ்தானில் இருப்பதுபோல்?

தெரியாமல் இப்படி வளர்ந்துவிட்டேன், சினிமாவில் ஆசை கனவெல்லாம் கிடையாது. பாகிஸ்தானில் குடியிருப்பதுபோல் இருக்கும் வாடகை வீட்டில் இருப்பது. 10 லட்சம் ரூபாய் அலுவலகம் சென்றதும் செக் மூலம் கொடுக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: இழந்த பிறகுதான் அருமை தெரிகிறது - கண்கலங்கிய விஜய் சேதுபதி

ABOUT THE AUTHOR

...view details