இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன், உடல் மீது அதிகம் கவனம் செலுத்துவதில் கெட்டிக்காரர். அவரது உடலமைப்பிற்காகவே இந்தியா மட்டுமின்றி, உலகளவிலும் மிகப் பிரபலமடைந்தவர். இதனையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த கீரிஷ் ஏஜென்ஸி தயாரிக்கவுள்ள படத்தில் நடிப்பதற்கு ஹிருத்திக் கையெழுத்துயிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டுக்கு செல்லும் பாலிவுட் சூப்பர் ஹீரோ! - ஹிருத்திக் ரோஷன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![ஹாலிவுட்டுக்கு செல்லும் பாலிவுட் சூப்பர் ஹீரோ! Hrithik Roshan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6243356-1110-6243356-1582957590409.jpg)
Hrithik Roshan
ஹிருத்திக் கடந்த 20 வருடங்களாக இந்திய சினிமாவில் புதிய கதைக்களம் கொண்ட படங்கள், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட படங்கள், சூப்பர் ஹூரோ படங்களில் நடித்து இந்தி சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டுசென்றுள்ளார். ஹிருத்திக்கை ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்துவதும், இந்தியாவில் படமாக்கப்பட வேண்டிய திட்டங்களை உருவாக்குவதும்தான் இந்த ஏஜென்ஸியின் நோக்கம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.