அஜித் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது படத்துக்காக பதிவு செய்திருந்த ‘வலிமை’ என்னும் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வக்குமார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘வலிமை’ என்ற தலைப்பு இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணியாற்றிய அதே டெக்னிக்கல் டீம் மீண்டும் இதில் களமிறங்கியுள்ளது.
இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: நிரவ் ஷா, தயாரிப்பு: போனி கபூர் (BayView Projects)
இந்த வலிமையான தலைப்பு கிடைத்ததற்கான பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கெனான்யா பிலிம்ஸ் நிறுவனர் செல்வக்குமார் இந்தப் படத்தின் தலைப்பை தனது படத்துக்கு பதிவு செய்துவைத்திருக்கிறார். இதனை அறிந்த ஹெச். வினோத், செல்வக்குமாரை சந்தித்து அஜித் நடிக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பு வேண்டும் என நட்பு முறையில் கேட்டிருக்கிறார். அஜித்துக்கு என்றவுடன் யோசிக்காமல் தருவதாக ஒப்புக்கொண்டாராம். ஏனென்றால் செல்வக்குமாரும் அஜித் ரசிகராம்.
'திருடன் போலீஸ்', 'ஒருநாள் கூத்து', 'புரூஸ்லீ' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த செல்வக்குமார், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரித்துவருகிறார்.
இதையும் படிங்க:#BXR பாக்ஸிங் ஜிம்மில் 'தர்பார்' சண்டைக் காட்சி